மேலூரில் முக்குலத்தோர் சட்ட இயக்கம் சார்பில் ஐம்பெரும் விழா
மதுரை மாவட்டம் மேலூரில் மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் திருமண மண்டபத்தில்
முக்குலத்தோர் சட்ட இயக்கம் சார்பில், ஐம்பெரும் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
மேலூரில் நேற்று 13.10.2024 அன்று மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் திருமண மண்டபத்தில்
முக்குலத்தோர் சட்ட இயக்கம் சார்பில், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர் அவர்களின் குருபூஜை விழா, மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா,
தென்பாண்டிச் சிங்கம் வாளுக்குவேலி அம்பலம் விழா, தெற்காசியாவை கட்டி ஆண்ட ராஜ
ராஜ சோழத் தேவர் விழா மற்றும் கல்வித்தந்தை அமரர் மூக்கையாத் தேவர் விழா என
ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொள்ள இயக்கத்தின்
சார்பில் தேவரினத் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விழாவில் வரலாற்று அறிஞர் வி.எஸ்.நவமணி, ஆப்பநாடு மறவர் சங்கத்தின் தலைவர்
டாக்டர். ராம்குமார், பி.எம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கே.என்.
இசக்கிராஜா தேவர், நேதாஜி இளைஞர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பசும்பொன்
செ.முத்து, அஇமூமுக பொதுச் செயலாளர் பாண்டியன், மருது தேசியக் கழகத்தின் தலைவர்
மருதுபாண்டியன், முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் தலைவர் வி.கே.கவிக்குமார் நடிகர்
ஆர்.கே.சுரேஷ், திரைப்படத் தயாரிப்பாளர் செளத்ரி தேவர், வழக்கறிஞர் உசிலை சங்கிலி,
அமமுகவின் ஜீவிதா நாச்சியார், முக்குலத்தோர் வாழ்வுரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
பூவை ஜெயக்குமார் தேவர், மற்றும் பலர் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும்
முன்னாள் எம்.எல்.ஏ -வுமான உ.தனியரசு அவர்கள் கலந்து கொண்டு சிறைப்புரையாற்றினார்.
விழாவில் முக்குலத்தோர் பேரினத்தின் பெருமைகளை பேசிய தலைவர்கள் அனைவரும்,
தேவரினத்தின் ஒற்றுமை தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் அவசியம் என்பதை
அனைவரும் உணர்த்தினர். 1996-ல் வெளியிடப்பட்ட தேவரின அரசாணையை உடனடியாக
தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும் என மிக முக்கியமான கோரிக்கையை எழுப்பினர்.
தேவரினம் தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு ஆட்படுவதாகவும், தேவரின இளைஞர்களை
மட்டுமே குறிவைத்து என்கெளன்டர்கள் செய்யப்படுவதாகவும், இந்த அநீதிகளை
உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நேதாஜி இளைஞர் சங்கத்தின் தலைவர்
வழக்கறிஞர் பசும்பொன் செ.முத்து அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
விழாவில் சிறப்பாக பணியாற்றிய முக்கியஸ்தர்கள் கெளரவிக்கப்பட்டனர். வை
முக்குலத்தோர் சட்ட இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முரளி
அம்பலம் சிறப்பக ஏற்பாடு செய்திருந்தார். விழாவினை வரலாற்று ஆய்வாளர்
சோழப்பாண்டியன் தொகுத்து வழங்கினார்.