புயலென புறப்பட்ட புலிக்கொடி வேந்தன்

தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் இருந்து 13 கிமீ தூரத்தில் தென்மேற்கு திசையில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கோரையூத்து என்ற அழகிய கிராமத்தில் ’பருத்திவீரன்’ புகழ் சினிமா நடிகர், திரு.செவ்வாழை ராசு அவர்களின் மூன்று மகன்களில் மூத்த மகனாக 26.11.1976 அன்று பிறந்தார் எஸ்.ஆர். தமிழன். இவருக்கு எஸ்.ஆர். கோபி மற்றும் எஸ்.ஆர். சக்கரவர்த்தி ஆகிய இரண்டு சகோதரர்கள் உண்டு.

தமிழீ்ழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் பிறந்ததால் என்னவோ, சிறுவயது முதலே தான் பிறந்த சமுதாயம் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக திகழ்ந்தார் எஸ்.ஆர். தமிழன். அவர் தனது கிராம விளையாட்டு குழுக்களுக்கும் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கும் தலைவனாக செயல்பட்டார். தனது M.A படிப்பினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முடித்தவர், பின்பு தனது சட்டப் படிப்பினை பெங்களூரில் உள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்து எல்எல்பி படித்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே தனது சமூகப் பணிகளை தொடங்கும் பொருட்டு, தேனி மாவட்ட பிரமலைக் கள்ளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, அச்சங்க செயல்பாடுகளில் திறன்பட செயலாற்றி, அதன் உறுப்பினர்களிடமும் நன்மதிப்பினை பெற்று சங்கத்தின் பல்வேறு நிர்வாக பொறுப்புகளை வகித்தார்.

’பருத்திவீரன்’ புகழ் சினிமா நடிகர், திரு.செவ்வாழை ராசு

தேனி மாவட்ட பிரமலை கள்ளர் சங்கத்தினை தேனி மாவட்டம் முழுவதும் பரவியிருக்கின்ற கள்ளர் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து, சங்கத்தினை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் சென்றார். இது இவரின் அரசியல் பணிக்கு  அடித்தளம் இட்டது. இதை தொடர்ந்து, 2006ல் திரு. BT அரசகுமாரின் திராவிட விழிப்புணர்ச்சிக் கழகத்தில் இணைந்த SR.தமிழன், அக்கட்சியின் தேனி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்பு, வங்கத்துச் சிங்கம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு 2009-ல் தனது கட்சியினை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன், தென்னகத்தின் சுபாஷ், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமை தாங்கிய அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் கட்சியில் இணைந்து தனக்கே உரித்தான பானியில் திறன்பட செயல்பட்டு ஃபார்வர்டு ப்ளாக்கினை தேனி மாவட்டம் முழுவதும் பரவச் செய்தார்.

2010 ல் இவரின் அதிதீவிரசெயல்படுகளை பார்த்த மாநிலத் தலைமை, அவரை தேனி மாவட்ட பொது செயலராக நியமித்தது. இதனை தொடந்து இவரின் செயல்பாடுகளினால், தேனி மாவட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் புலிக்  கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது.

2011-ல் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக்கின் மாவட்ட மாநாட்டினை தேனியில் சிறப்பாக நடத்தினர். இந்த மாநாட்டு நிகழ்வுக்கு பின்பு, தேனி மாவட்ட தேவரின மக்களின் கவனம் இவர் மேல் முழுவதும் திரும்பியது. தொடர்ந்து, இவர் தனது துடிப்பான. கட்சி பணிகளால், மாநில இளைஞரணி செயலராக 2012-ல் நியமிக்கப்பட்டார். பின்பு 2013-ல் சென்னையில் நடைபெற்ற அகிலஇந்திய ஃபார்வர்டு ப்ளாக்கின் அகில இந்திய மாநாட்டில், மத்திய குழு உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். தொடந்து தேனி மாவட்டம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி, நகரம், ஒன்றியம் மற்றும் தொகுதி செயலாளர்களை நியமித்து கட்சியை பலப்படுத்தினார். இவரின் இச்செயல்பாடு தேனி மாவட்ட திராவிட கட்சிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியது.

ஆயுத பூஜை என்று வந்துவிட்டால் எஸ்.ஆர்.தமிழன் அவர்களைத் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆட்டோ நிலையங்கள், அவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவரது தலைமையில் தங்களது ஆட்டோக்களுக்கும், அலுவலகங்களுக்கும் பூஜை செய்து வழிபாடு செய்யும் அளவுக்கு தொழிளாலர்களின் தோழனாக விளங்கினார்.

மேலும் தேனி மாவட்டத்தில் தேவரின சமுதாய மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும், எந்த நேரமாக இருந்தாலும் நேரடியாக வந்து தீர்த்து வைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு தேவரின இளைஞர்களின் வரவேற்பினை பெற்றார். அது மட்டுமில்லாமல் தேனி மாவட்ட பொதுமக்களின் அடிப்படை வாழ்வதார பிரச்சினைகளை தனக்கே உரித்தான போராட்டங்களின் மூலம் முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றியும் கண்டார். அதில் பொதுமக்களுக்கு அதிகம் பயன்படும் மருத்துவம், குடிநீர், சாலைகள், விவசாயிகளின் பிரச்சனைகள,. முல்லைப் பெரியார் பிரச்சனை மற்றும் கேரளா தமிழர்களுக்கானஅதரவு போராட்டங்கள் ஆகிய பல்வேறு மக்கள் அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி தனது அரசியல் பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டார்.

இவரின் வளர்ச்சியினை கண்டு சீரணிக்க முடியாத அதிகாரவர்க்கம், இவர் மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு எஸ்.ஆர்.தமிழனை சிறையில் அடைத்தது. இவரை சிறையில் அடைத்ததினை அறிந்த 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு எதிர்ப்பினை காட்டியதன் விளைவாக பின்பு 7 நாட்களில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்பு இவர் மக்கள் நலப் போராட்டங்களுக்காக தேனி மாவட்டம் முழுவதும் மேலும் அதிதீவிரமாக செயல்படத் தொடங்கினார். இதனை தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களிடையே ஒரு இனக்கமான சமத்துவ சூழ்நிலை உருவாக காரணமாக இருந்தார். தேனி மாவட்டத்தில் அனைத்து சமுதாய மக்களின் ஆதரவு மேலும் மேலும் பெருகியது.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத அதிகாரவர்க்கம், இவரின் கட்சி மாநில பொதுசெயலர் மூலமாக இவர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டது. இதை மீறி தனது மக்கள் நலபோராட்டங்களை தொடர்ந்ததின் விளைவாக இவர் சார்ந்த. கட்சியின்  மாநிலப் பொதுசெயலர், அதிகாரவர்கத்தின் அழுத்தத்தின் காரணமாக இவரை கட்சியின்  அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியதாக அறிவித்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக், தமிழ் மாநில தலைவர் PKM.முத்துராமலிங்கம், ஃபார்வர்டு ப்ளாக்கின் தமிழக பொதுசெயலர் தன்னிச்சையாக SR.தமிழனை நீக்கியது செல்லாது என அறிவித்தார். இந்த உட்கட்சி மோதல்களுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற மத்திய குழுவின் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டு SR.தமிழன் நீக்கம் செல்லாது என மீண்டும் அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தினை வெற்றியுடன் முடித்துவிட்டு, தனது எல்.எல்.பி சட்டபடிப்பு தேர்வு எழுத பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ‘மாவீரன்’ SR.தமிழன் 26.12.2014 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை, ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறி, தேனியில் அவரது ஆதரவாளர்கள், அவரது சாவில் நடந்துள்ள சதித்திட்டத்தினை கண்டுபிடிக்க கோரி முறையான விசாரணை செய்ய வேண்டும் என மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பொதுமக்கள் இன்றும் அவரது சாவு இயற்கைக்கு எதிரானது என்றே கருதுகின்றனர். மரணம் அடையும் போது ‘மாவீரன்’ SR.தமிழனுக்கு 39 வது வயது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தனது இளம் வயதிலேயே மக்களின் மகத்தான தலைவராக அன்று உருவாகியிருந்தார்.

தேனி, அல்லிநகரத்தை அடுத்துள்ள ரத்தின நகர் பகுதியில் அடக்கம் செய்வதற்காக 27.12.2014 சனிக்கிழமை அன்று காலை எஸ்.ஆர்.தமிழனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலம் தேனி அல்லிநகரம் வழியாக சுக்குவாடன்பட்டிக்கு அவரது சடலம் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டபோது, தேனி, அல்லி நகரம் பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் தெரு சந்திப்புப் பகுதியில் நின்றிருந்த சிலர், திடீரென ஊர்வலத்தினர் மீது கற்களை வீசினர். அனைத்து மக்களுக்கும் சாதி மத பேதம் பார்க்காமல் உழைத்த ஒரு மகத்தான தலைவரின் இறுதி ஊர்வலத்தில், அவரது சாதி மட்டுமே அங்கிருந்த சாதி வெறியர்களுக்கு தென்பட்டது.

அப்போது இறுதி ஊர்வலத்தில் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை இடித்துத் தள்ளிக்கொண்டு, தெருவுக்குள் அதிவேகமாக திரும்பியதில், டிராக்டரில் நின்று கொண்டிருந்த தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பல்லுப்பாண்டி என்ற ராமர், நிலைதடுமாறி கீழே விழுந்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து, இரு தரப்பினரிடையே கல் வீச்சு ஏற்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி வந்த அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து, கலவரத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைக்க முயன்ற போலீசார்  2 பேர் அரிவாளால் வெட்டப்பட்டு காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து கலவரக்காரர்களை கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இச் சம்பவத்தால் தேனியில் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து அல்லிநகரத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தப் பகுதி சாதி ரீதியாக கலவரப் பகுதி என்று அறியப்பட்ட நிலையிலும், கூடுதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளாமல் காவல்துறையினர் அலட்சியமாக  இருந்ததே இந்த சம்பவம் நடக்க காரணமாக அமைந்தது என்று அப்பகுதி மக்கள் புகார் கூறினர். அந்தவகையில் ஒரு புரட்சியாளனின் இறுதி யாத்திரை கூட புரட்சியோடுதான் முடிவடைந்தது.

எஸ்.ஆர் தமிழன் இழப்பிலிருந்து அவரது தந்தையால் மீளவே முடியவில்லை. ஒரு மகத்தான தலைவராக உருவெடுத்திருந்த தன் மகன் திடீரென்று இறந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அதில் தன்னால் அந்த கேரக்டராக நடிக்க நெஞ்சில் தைரியம் இல்லை என தனக்கு வந்த சினிமா வாய்ப்புகளை பத்து வருடங்களாக தவிர்த்திருந்தார், அவரது தந்தையை மட்டுமல்ல, பொதுமக்கள் பலரையும் அவரது இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது,

கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள மஞ்சளாறு அணை என்ற ஊரில் மக்களுக்காக இவர் எடுத்த மாபெரும் போராட்டத்திற்காக, மாவீரன் S.R.தமிழனுக்கு  அவரின் தியாகத்தின் போற்றும் வகையில், அந்த ஊர் மக்களின் சார்பாக நினைவு பாசறை வைத்து இன்றும் வணங்கி வருகிறார்கள்.

ஆண்டு தோறும் எஸ்.ஆர்.தமிழன் உடல் அடக்கம் செய்யப்பட்ட தேனி ரத்தினம் நகரில் உள்ள அவரது சமாதியில், அரசியல் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர்  அஞ்சலி செலுத்துவது வழக்கமாக நடைபெறும் மரபாகும். ஒவ்வொரு வருடமும் அவரது நினைவு நாளில், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மாவீரன் எஸ்.ஆர்.தமிழன் அவர்களின் தியாகத்தை பறைசாற்றும் விதமாக பொதுமக்கள் அவருக்கு அவரது சமாதியின் மீது மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால் எஸ்.ஆர்.தமிழனின் புகழ் பரவக்கூடாது என நினைத்த அவரது எதிரிகளும், துரோகிகளும் அதிகார வர்க்கத்தின் துணையோடு அந்த மண்டபத்தை இடித்து தள்ளினார்கள்.

முகவரி இல்லாதவர்களுக்கெல்லாம் பலகோடியில்  நினைவிடம் அமைக்கும் தமிழக அரசு, சாதி,மதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் போராடிய தேனியின் போராளி S.R.தமிழன் அவர்களுக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க வேண்டும் அல்லது மக்கள் சார்பாக மாவீரனுக்கு நினைவிடம் அமைக்க அனுமதி தரவேண்டும் என்பதே அவருடைய நினைவு நாளில் மக்கள் அனைவரின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.

“நம்மள நம்பி இருக்குற தோழர்களுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம். அவங்களுக்காக எதை வேணும்னாலும் இழக்கலாம். ஃபார்வர்டு ப்ளாக், நேதாஜி, பசும்பொன் தேவர் காலத்தில் எப்படி புலிக்கொடியும் சிங்கச் சின்னமும் ஆண்டதோ, அதே மாதிரி நம்ம காலத்துலயும் ஆள வைச்சிடனும்” என்ற அவரது இறுதி வார்த்தைகள் இன்றும் நம் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கை தன் இறுதி மூச்சு வரையில் நேதித்த உத்தம தலைவன், தமிழக நேதாஜி, தேனியின் புரட்சியாளர், மாவீரன், மக்கள் நலத் தொண்டன், முக்குலத்து காவலனின் மறையா புகழினை நாம் தலைவணங்கி போற்றுவோம்! மாவீரா!

போராளிகள் துவண்டு போவதில்லை!

ஜெய்ஹிந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *