மேலநீலிதநல்லூர் PMT கல்லூரியை நிர்வகிக்கும் தேவர் கல்விச் சங்கத்தின் பரிதாப நிலை

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர், உறங்காப்புலி, அமரர் பி.கே.மூக்கையாத் தேவர் அவர்களின் பெரும் முயற்சியினால், அப்போதிருந்த தேவர் திருத்தொண்டர்களின் உதவியோடு, பொதுமக்களிடம் நன்கொடைகளை பெற்று, முக்குலத்தோருக்காக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் மூன்று கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

அன்றைய முதல்வராக இருந்த சி என் அண்ணாதுரையிடம் பி.கே.மூக்கையாத் தேவர் அவர்கள், ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்கள் தங்களுடைய பள்ளிக்கல்விக்கு பின்னால் கல்லூரிப் படிப்பிற்கு வாய்ப்பு வசதிகள் கிடைப்பதில்லை, அவர்களுடைய மேற்படிப்பிற்கென  கல்லூரிகள் துவங்குவது அவசியம் என எடுத்துரைத்து, மூன்று முத்தான கல்லூரிகளை ஊரகப் பகுதியில் தொடங்க அனுமதியைப் பெற்றார். அதன்படி,  1968ஆம் ஆண்டு, தென் மாவட்ட கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மாணவர்கள் பட்டப்படிப்புகள் படித்து, நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்று அதன் மூலம் அவர்கள் சார்ந்த மக்களையும் முன்னேற்றுவதற்காக பொதுமக்கள் அளித்த சிறு சிறு பங்களிப்புகளுடன் கல்வி அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு அதன் வாயிலாக பின்தங்கிய கிராமப் பகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி மற்றும் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் மேலநீலிதநல்லூர் ஆகிய ஊர்களில் இந்த மூன்று கல்லூரிகளும், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளாக துவக்கப்பட்டன‌.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, கள்ளர் கல்விக் கழகம் என்ற நிர்வாக கட்டுப்பாட்டின் கீழும், கமுதி மற்றும் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகள், முறையே தேவர் கல்விச் சங்கம், திருநெல்வேலி,  தேவர் கல்விச் சங்கம், கமுதி, என்ற நிர்வாக கட்டுப்பாட்டின் கீழும், கூட்டுறவு சங்க பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டு இந்த மூன்று கல்லூரிகளும் இயங்கி வந்தது.

மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த மூன்று கல்லூரிகளிலுமே, சிலரின் சுயநலம் காரணமாக, நிர்வாகத்தில் ஏற்பட்ட பெரும் குழப்பங்களினால், கமுதி  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியை தமிழக அரசே நேரடியாக 30 வருடங்களுக்கு முன்னால் தன் கட்டுப்பாடில் எடுத்துக் கொண்டது. ஏனைய இரண்டு கல்லூரிகளையும் தற்போது சிறப்பு அலுவலர்களை நியமித்து அரசே அதன் நிர்வாகத்தை நடத்தி வருகிறது.

இதில் மேலநீலிதநல்லூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மட்டும் இன்னும் ஒரு படி மேலே போய், கல்லூரியை கேரளாவைச் சேர்ந்த தனியார் ஆட்கள் கையகப்படுத்த முயற்சி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு, தேவர் கல்விச் சங்கத்தின் உறுப்பினர்கள் வெளியீ்டு தாமதம் என அக்கல்லூரியைச் சுற்றி தொடர் சர்ச்சைகள் நடந்தவண்ணம் உள்ளது. ஏன் இக்கல்லூரியை சுற்றி இவ்வளவு சர்ச்சைகள்? என்னதான் நடக்கிறது கல்லூரியின் நிர்வாகத்தில்? என்பதைப் பற்றிதான் இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட A.R.P. நகரில், திருநெல்வேலி பிரதான பாதையில் சங்கரன்கோவிலுக்கு தெற்கே 12 கிமீ தொலைவில் உள்ள அழகான, இனிமையான, அமைதியான  பகுதியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 17.01.1970 தேதியிட்ட மதுரை பல்கலைக்கழக  ஆட்சி மன்றக் குழுத் தீர்மானத்தின்படி கடந்த 1970-71ம் கல்வி ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதுஆரம்பத்தில் மதுரை காமராசர் பல்கலைகழகம் கீழும் தற்போது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கும், ஏழைகளுக்கும் தரமான உயர் கல்வியை வழங்க வேண்டும் என்ற அமரர் பி.கே மூக்கையாத் தேவரின் தொலைநோக்கில் உருவாக்கப்பட்ட இக்கல்லூரியில், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி கல்லூரி கட்ட அனுமதியை பெற்றவுடன் அந்த கல்லூரியை உருவாக்குவதற்காக பி.கே மூக்கையாத் தேவர் மிகவும் சிரமப்பட்டு மடியேந்தி, இரத்தம், வேர்வை சிந்தி தேவையான நிதியை திரட்டினார். மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் பலர், தங்களது நிலத்தை கல்லூரிக்கு தானமாக வழங்கினர் (பதிவு எண்கள் 1398/1969, 1399/1969, 326/1970, 421/1970, 991/1971). அப்படி தானமாக வழங்கப்பட்ட நிலத்தையும்,  கல்லூரியை நிர்வாகம் செய்யவும் அதன் வளர்ச்சிக்காகவும் 27.08.1969 அன்று எட்டு உறுப்பினர்களுடன் தேவர் கல்விச் சங்கம் (Thevar Educational Society), திருநெல்வேலி (பாளையங்கோட்டை) பதிவு எண். 43/1969 என்ற பெயரில், எண்.3, முதல் தெரு, பெருமாள்புரம், திருநெல்வேலி என்ற முகவரியுடன் பதிவு செய்யப்பட்டது. இதன் முதல் தலைவராக முன்னாள் சபாநாயகர் எஸ்.செல்லப்பாண்டியன் அவர்களும், செயலாளராக ஏ.ஆர்.பொன்னையா அவர்களும் நியமிக்கப்பட்டனர். .

மேற்படி சங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்த கல்லூரி, சிறிது காலத்திற்குப் பிறகு  தேவர் கல்விச் சங்கத்தின் செயலாளராக இருந்த ஏ.ஆர்.பொன்னையா, தலைவர் எஸ்.செல்லப்பாண்டியனை ஓரங்கட்டி விட்டு, போலியான ஆவணங்களை தயார் செய்து, 27.11.1971 அன்று என்.எஸ், நல்லுச்சாமி என்பவரை தலைவராகவும், மேற்படி ஏ.ஆர்.பொன்னையா செயலாளராகவும் கொண்டு தேவர் கல்வி சங்கம் (Thevar Educational Society), மேலநீலிதநல்லூர் பதிவு எண். 78/1971 என்ற பெயரில் போலியாக ஒரு புதிய சங்கத்தை பதிவு செய்து அச்சங்கத்தின் கீழ் இந்த தேவர் கல்லூரியை கொண்டு வந்தனர்.

எஸ்.செல்லப்பாண்டியனும் ஒதுங்கி கொள்ள, கல்லூரி, பொன்னையா தேவரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து விரிவுரையாளராக வேலைபார்க்க ரமா தேவி என்பவர் வந்தார். நாளடைவில் ரமா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டு, பொன்னையா தேவர், அவரை தனது இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்கிறார்.

இதற்கிடையில் தேவர் கல்விச் சங்கம், திருநெல்வேலி (43/1969) செயல்படாத சங்கமாக கண்டறியப்பட்டு, 02.07.1980 அன்று அரசிதழில் இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

பிறகு ரமா தேவி கல்லூரி முதல்வராக

பதவி உயர்வு பெறுகிறார். சிறிது காலத்துக்கு பின் பொன்னையா தேவர் மரணமடைந்துவிட, கல்லூரியின் நிர்வாகம் அனைத்தும் ரமா தேவியின் கட்டுப்பாட்டில் செல்கிறது. வருடங்கள் செல்லச் செல்ல, கல்லூரி  கல்விச் சங்கத்தில் இருந்த பிற உறுப்பினர்களை நீக்கிவிட்டு, தன் பிள்ளைகளையும்,மருமகன்களையும் அதில் உறுப்பினர்களாக்கி கல்லூரியை முற்றிலும் தன் வசப்படுத்துகிறார். ரமாதேவி முறைகேடாக கல்விச் சங்கத்தின் செயலாளராக இருந்து கொண்டு அரசால் கல்லூரிக்கு வழங்கப்பட்ட நிதி உதிவியை மோசடியாக கையாண்டதோடு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மற்றும் அது தொடர்பான சொத்துக்களை அபகரித்தார்.

தேவமார்களால் உருவாக்கப்பட்ட தேவர் கல்விச் சங்கத்தில், முழுக்க முழுக்க முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியாயமாக உறுப்பினர்களாக இருக்க வேண்டிய நிலையில் தற்போது அது மலையாள நாயர்களின் கட்டுப்பாட்டில் சென்றது. கல்லூரியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் இருப்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலையில் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்களே பேராசிரியர்களே நியமிக்கப்பட்டனர்.

மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி கட்டிய ஆண்டு வர்ணம் பூசியது. அதற்குப் பிறகு எந்த பராமரிப்பு பணியும் அங்கு நடைபெறவில்லை. அனைத்து பணமும் ரமா தேவியின் மகளுக்கு கேரளாவில் மருத்துவமனையாக ஆகிப்போனது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியின் பெயரில் இருந்த அதன் அனைத்து சொத்துக்களும் அதன் செயலாளர் பெயரில் மாற்றம் செய்து கொள்ளலாம் என தனது போலியான புதிய சங்கத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றியது மலையாள மாஃபியா கும்பல்.

ரமா தேவி கல்லூரி பொறுப்பை ஏற்றதிலிருந்து, 13 பேராசிரியர்கள் நியமனம் முதல் அனைத்திலும் முறைகேடுகள் தொடர்ந்தவண்ணம் இருக்கவே, பலதரப்பட்ட மக்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் உருவாக்கப்பட்ட கல்லூரியை தனிநபர் கையகப்படுத்தி அதிகாரத்தில் வைத்திருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத  சுற்று வட்டாரத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.

அவர்களுடன் இணைந்து சமூக ஆர்வலர்கள் பலரும் கல்லூரியை மீட்டெடுக்க பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை தன்னெழுச்சியாக முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள், தேவர் கல்வி பாதுகாப்பு மற்றும் மீட்பு இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கி, கல்லூரியை மீட்பதற்காக உயர் நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு சென்றனர்.

மேலநீலிதநல்லூர்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில்  பணி நியமன முறைகேடுகள்/ நிர்வாக சீர்கேடுகள் நடப்பதாக  சென்னை உயர்நீதிமன்றதில் கல்லூரி மீட்பு  குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பணியிடங்கள் நிரப்ப தடை ஆணை பெறப்பட்டது கல்லூரி மீட்பு குழுவிற்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது. 

மேலும் பல தன்னார்வலர்கள், போலியாக பதிவு செய்யப்பட்டுள்ள மேலநீலிதநல்லூர் கல்விச் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பதிவுத் துறைக்கும், உயர்கல்வித் துறைக்கும் புகார் மனுக்களை அனுப்பி வைத்ததன் விளைவாக, தமிழக அரசு, இது சம்மந்தமாக பதிவுத் துறையை அறிக்கை சம்ர்பிக்க உத்தரவிட்டது. அறிக்கையில், முன்னதாக பதிவு செய்யப்பட்ட தேவர் கல்விச் சங்கம், திருநெல்வேலி (பதிவு எண்.43/1969) -ஆனது பின்னர் பதிவு செய்யப்பட்ட தேவர் கல்விச் சங்கம், மேலநீலிதநல்லூர் (பதிவு எண்.78/1971)-டன் முறையாக இணைக்கப்படாமலும், சிறப்புத் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படாமலும், முதல் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியையும் அதன் அனைத்து சொத்துக்களையும் இரண்டாவது சங்கத்தின் பெயரில் ரமாதேவி முறைகேடாக நிர்வாகம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், ”மேலநீலிதநல்லூர் PMT கல்லூரியை கபளீகரம் செய்துள்ள மலையாளி இரமாதேவியை கல்லூரியை  விட்டு வெளியேற்று” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு கருப்பு தினம் கடைபிடித்தனர். வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், ஊர்களில் கருப்பு கொடி ஏற்றியும், இளைஞர்கள் கண்களில் கருப்பு துணி கட்டியும், சமூக வலைதளங்களில் Profile picture கருப்பாக மாற்றியும், E-mail அனுப்பும் போராட்டம் என பல நூதன போராட்டங்களை போராட்டக்காரர்கள் முன்னெடுத்தனர். எங்ககல்லூரி எங்களுக்கே, #savepmtcollege போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மத்தியில் பெருமளவில் பரப்பப்பட்டது.

40 நாட்களுக்கும் மேலாக பலவகைகளில் போராடி, இறுதியாக மேலநீலிதநல்லூர் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்களை சங்கரன்கோவில் விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து அன்றைய அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் ராஜலட்சுமி நேரில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மேலநீலிநல்லூர் தேவர் கல்லூரி விவகாரம் தொடர்பாக, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும், மேலநீலிதநல்லூர்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில்  பணி நியமன முறைகேடுகள்/ நிர்வாக சீர்கேடுகள் சம்மந்தமாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் டி.ஹரிபரந்தாமன் அவர்களை பணித்தது. அவரது அறிக்கையின்படி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு, உடனடியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை நிர்வகிக்கும் ரமாதேவி கும்பலை இடைநீக்கம் செய்துவிட்டு, கல்லூரியை நிர்வகிக்க ஒரு சிறப்பு அலுவலரை நியமிக்க உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு 15.07.2021 அன்று, தேவர் கல்விச் சங்கம், மேலநீலிதநல்லுர் (78/1971)-ன் நிர்வாகக் குழுவை கலைத்துவிட்டு, திருநெல்வேலி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநரை கல்லூரியின் நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அலுவலராக நியமித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ரமாதேவியின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை,  W.P(MD)NO.2469/2019 என்ற வழக்கில் 31.7.2024 தேதி உத்தரவின்படி மேற்படி மேலநீலிதநல்லூர் தேவர் கல்விச் சங்கத்திற்கு (பதிவு எண்.78/1971) புதியதாகபொதுக்குழு உறுப்பினர் சேர்க்கை நடைபெற ஆணையிட்டது. அதனடிப்படையில், கல்லூரியின் தற்போதைய சிறப்பு அலுவலர் டாக்டர் ஆர். பாஸ்கரன், புதிய பொதுக்குழு உறுப்பினர்களை சேர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இது சம்மந்தமாக நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப மனு 30.8.2024 முதல் 9.9.2024 (இடையில் வரும் சனி ஞாயிறு விடுமுறை) வரை கல்லூரியில் உள்ள அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும், இறுதி உறுப்பினர் பட்டியலை தனி அலுவலர், 12.9.2024 அன்று தேவர் எஜுகேஷனல் சொசைட்டி அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வின்ணப்ப படிவங்களை பெற்று ரூ.250/- காசோலையுடன் விண்ணப்பித்துச் சென்றனர். விண்ணப்பம் வாங்க வந்த பல பேர் மாற்று மத பெயர்களுடனும், தாங்கள் என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறோம் என்பது கூட தெரியாமல் வரிசையில் நின்றிருந்ததைப் பார்த்தால், அவர்களை யாரோ பணம் கொடுத்து கூட்டி வந்திருப்பது இதன்மூலம் பட்டவர்த்தனமாக தெரிய வருகிறது. தங்கள் உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதன் மூலம், கல்லூரியை மீண்டும் சுலபமாக கபளீகரம் செய்துவிடலாம் என யாரோ சிலரின் சத்தி திட்டமாகவே நமக்கு தெரிந்தது.

இதனை அறிந்து கொண்ட நேதாஜி இளைஞர் சங்கம், தேவர் கல்லூரியின் சிறப்பு அலுவலருக்கு, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களுடன் சாதிச் சான்றிதழையும் இணைக்க அறிவுறுத்த வேண்டும் எனவும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே தேவர் கல்விச் சங்கத்தில் சேர்க்க வேண்டும் எனவும், மாற்று சமூக மக்களை இச்சங்கத்தில் சேர்த்தால் அதன் அடிப்படை நோக்கமே சிதைந்து போகும் எனவும் தனது கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ளது. மேலும் அதன் தலைவர் பசும்பொன் செ.முத்து அவர்கள் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக, தென்காசி மாவட்ட பதிவாளருக்கு மேற்படி சங்கத்தின் துணை விதிகளை கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தில் மனு அனுப்பியிருக்கிறார்.

இதற்கிடையில், 06.09.2024 க்குப் பிறகு, திடீரென பொதுக்குழு உறுப்பினர் சேர்க்கைகான வின்ணப்ப படிவம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. 09.09.2024 அன்று நடைபெற இருந்த விண்ணப்பம் வழங்கும் பணியானது 13.09.2024 அன்று தள்ளி வைக்கப்பட்டது. இறுதி உறுப்பினர் பட்டியல் 27.09.2024 அன்று வெளியிடப்படும் என மாற்றி அறிவிக்கப்பட்டது.

தற்போது விண்ணப்பங்கள் அனைத்தும் கொடுத்து முடித்த பிறகும், இறுதிபட்டியல் என்ன காரணத்தினாலோ

இதுவரையில் அதன் சிறப்பு அலுவலரால் வெளியிடப்படவே இல்லை.

பத்தாயிரத்திற்்கும் மேற்பட்டோர் பொதுக்குழு உறுப்பினராக விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், பல துரோகிகள் ஆதரவுடன், முந்தைய நிர்வாகத்தினர் தற்போது உச்சநீதிமன்றத்தில்  மீண்டும் இடைக்கால தடையாணை பெற்றதாவும், இந்த வழக்கில் தேவர் கல்லூரி மீட்பு இயக்கம் சார்பில் தங்களையும் பிரதிவாதிகளாக சேர்க்க கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

ஒரு சமூகம் கல்வியால் மட்டும்தான் உயர முடியும் என்ற உயரிய நோக்கத்தோடு ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்காக அரும்பாடுபட்டவர் தலைவர்  பிகே மூக்கையா தேவர். அவர் ரத்தத்தை உழைப்பாக சிந்திய அந்த தியாகத்தால் உருவாக்கப்பட்ட அந்த கல்லூரியை தேவரினம் இனியும் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.

தேவர் எஜுகேஷனல் சொஸைட்டி, திருநெல்வேலி என்ற பெயரில்தான் அரசு அன்றைய தினம் அங்கீகாரம் வழங்கியது. பின்னால் வந்த தேவர் எஜுகேஷனல் சொஸைட்டி, மேலநீலிதநல்லூருக்கும் கல்லூரிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. எனவே முறைகேடாக ஆக்கிரமித்துள்ள மேற்படி புதிய சங்கத்திடம் இருந்து கல்லூரியையும் அதன் சொத்துக்களையும் மீட்டு, பழைய சங்கத்திடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். பழைய தேவர் கல்விச் சங்கம், திருநெல்வேலி புதிப்பிக்கப்பட்டு, முக்குலத்தோர் சமூகத்தில் இருந்து புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்லூரியை சீரிய முறையில் நிர்வகிக்க வழிவகை செய்ய வேண்டும், இந்த கல்லூரி எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ,  அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு,  தமிழக அரசு தேவையான முயற்சிகளை விரைந்து எடுக்க வேண்டும்.

மாறாக கல்லூரி மீண்டும் இந்த மண்ணிற்கோ, அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கோ சிறிதும் தொடர்பற்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்ப ஆதிக்கத்தின் கீழோ அல்லது புதிதாக யாராவது தனி நபரின் கீழோ கொண்டு செல்லப்படுமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என தேவரின அமைப்புகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பொது மக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என,  அனைவரிடமும் பொது நிதி உதவி பெற்றும்,  நிலம் தானமாகப் பெற்றும்,  கல்லூரியை கட்டமைக்கத் தேவையான உதவி பெற்றும்,  பல கிராம மக்கள்,  ஊதியம் இல்லாமல் தங்களின் உழைப்பைக் கொடுத்து,  வேர்வையை இரத்தமாக சிந்தி,  உருவாக்கப்பட்ட இந்த கல்லூரியை பல்வேறு சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி மீட்டெடுத்து, தற்போது தற்காலிகமாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள். அரசிடம் இருந்து மீண்டும் தேவமார்களின் கைகளில் முறையாக ஒப்படைக்கப்பட்டு கல்வி தந்தையின் கனவை நனவாக்க வேண்டும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் புகழை பார் முழுக்க பரப்ப வேண்டும்.

மேலநீலிதநல்லூர் தேவர் கல்லூரியை சட்டத்திற்கு புறம்பாக கைப்பற்ற முனைப்பு காட்டும் கயவர்களை விரட்டியடிப்போம்! எங்கள் கல்லூரி எங்களுக்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *