நேதாஜி இளைஞர் சங்கத்தின் தலைவர் என்ற வகையில், இந்த பேரியக்கத்திற்கு தலைமை தாங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நமது இயக்கம், தேவர் இனத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வகையில் கடந்த பல ஆண்டுகளாக உழைத்து வருவதை நீங்கள் யாவரும் நன்கு அறிவீர்.
தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அர்ப்பணிப்பு உணர்வால் ஈர்க்கப்பட்டு, ஒற்றுமை, தியாகம் மற்றும் சேவை போன்ற அவரது பெரும் கனவுகளை செயல்படுத்த பல்வேறு வழிகளில் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அவற்றில் குறிப்பாக தேவரின மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளில் சட்ட ரீதியாக பல்வேறு வழிகளில் உதவுகிறோம்.
இத்தகைய பாரம்பரியம் கொண்ட நமது சங்கத்தில் உங்கள் அனைவரையும் இணைந்து செயல்பட மகிழ்ச்சியுடன் அழைக்கிறேன். தேவர் சமுதாயத்தினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் எங்களின் உன்னதமான பணியில் உங்களையும் இணைத்திடுங்கள்.
தேவரினத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவோம்.
ஜெய்ஹிந்த்!
அன்புடன்,
பசும்பொன் செ.முத்து BA.,BL.,
தலைவர், நேதாஜி இளைஞர் சங்கம்