காவல் நிலையத்தில் புகார் செய்வது எப்படி?

பிற சமுகங்களை விட இன்றைய தேதியில் தேவரின மக்கள் பெரும்பாலும் பல இடங்களில் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் ஊடகத்திலோ, வெளியிலோ வருவதில்லை. அவர்கள் மீது நடத்தப்படும் குற்றங்களை கூட முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதில்லை.

பட்டியல் இன மக்களின் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களை விரைந்து விசாரிப்பது போல் தேவரின மக்கள் மீது நடத்தப்படும் குற்றங்களை விசாரிப்பதில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது. எனவே இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நீதியை போராடியாவது பெறுவதற்கு குறைந்தபட்ச சட்ட அறிவு பெறுதல் அவசியமாகிறது. சட்ட விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறைந்த பட்சம் ஒரு முதல் தகவல் அறிக்கையை (FIR) எவ்வாறு பதிய வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களை நீங்கள் தான் சட்டத்தின் உதவியுடன் காத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான கிராமப்புற தேவரின இளைஞர்களுக்கு ஒரு குற்றம் நடந்தால், காவல் நிலையத்தில் எப்படி புகார் செய்வது என்பது தெரிவதில்லை. மேலும் புகார் மனு கூட எப்படி எழுதவேண்டும் என்று தெரிந்திருப்பதில்லை. இதனால் பல இடங்களில் குற்றத்திற்கு ஆட்பட்டும், புகார் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை இன்னும் இருக்கிறது. அதற்கான தீர்வை கொடுக்கும் முயற்சியே இந்த கட்டுரை.

உங்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடைபெறுகிறது எனில், உடனே நீங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையம் சென்று நடந்த நிகழ்வுகளை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள். எந்தவொரு காவல் நிலையத்திலும் தற்போது புகாரை பதிவு செய்யுய முடியும் எனினும், முடிந்தளவு குற்றம் நடைபெற்்ற எல்லைகுட்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்க முயற்சி செய்யுங்கள்்.  நேரில் போக முடியவில்லை எனில் ஆன்லைன் வழியாக தமிழ்நாடு காவல்துறையின் https://eservice.tnpolice.gov.in/ComplaintRegistrationPage?o என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று புகாரை பதிவு செய்யுங்கள்.

குற்றம் நடைபெற்ற பிறகு முறையாக புகார் செய்ய வேண்டும். குற்றத்தை நேரில் கண்டவரோ அல்லது பாதிக்கப்பட்டவரோ அல்லது அவர் சார்பில் வேறு ஒருவரோ வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமோ, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். புகார் சரியாக இல்லாத பட்சத்தில், காவல்துறை அதில் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் ஏற்படலாம். உங்கள் புகார் மனுதான் அந்தக் குற்றம் பற்றிய விசாரணைக்கான அடிப்படை தகவல் ஆகும். இதுவே கடைசி வரை வழக்கு நடைபெற உதவும் முழுமுதற் ஆவணம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அத்தகைய மிக முக்கியமான புகார் மனுவை மிகவும் கவனத்துடன் தயார் செய்ய வேண்டும்.

இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம் அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம் ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள்.

உதாரணமாக உங்களை ஒரு நபர் அல்லது கும்பல் அடித்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை கீழ்க்கண்டவாறு மனு தயார் செய்து சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் நேரில் சென்று புகார் கொடுக்க வேண்டும்.

மாதிரி புகார் மனு

அனுப்புனர்

             ச.பழனிச்சாமி (வயது 42),
             த/பெ ம. கருப்புச்சாமி தேவர்,
             3/32, மேல்ரத வீதி,
             கீழாசேவல்புரம்,
             முதுகுளத்தூர் (வட்டம்),
               இராமநாதபுரம் (மாவட்டம்)- 623554.
              அலைபேசி : 9874523XX.

பெறுநர்

             உயர்திரு காவல் ஆய்வாளர்  
             அவர்கள் (அல்லது)
             உயர்திரு காவல் சார்பு
            ஆய்வாளர் அவர்கள்,
             முதுகுளத்தூர் காவல் நிலையம்,
             முதுகுளத்தூர்.

பொருள்: என்் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யும் முயற்சியுடன் கொடூரத் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை வேண்டுதல் சம்மந்தமாக.

ஐயா,

நான்் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். 28.10.2024 அன்று சுமார் நண்பகல் 0200 மணியளவில், கீழாசேவல்புரம் கிராமத்தைச்் சேர்ந்த சங்கர் த/பெ லட்சுமணன், சேகர் த/பெ இராமநாதன், தனுஷ், பிரசாந்த், அரவிந்த், சிபிராஜ், அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 5 பேர் மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 10 பேர் மேற்படி முகவரியில் உள்ள எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என் மீது கொலை செய்யும் நோக்கத்துடன் கற்களாலும், கம்புகளாலும், வாள், அருவாள், கடப்பாரை மற்றும் வேல் கம்பு போன்ற கொடூர ஆயுதங்களாலும் என்னை பயங்கரமாக தாக்கி கொடுங்காயங்்களை ஏற்படுத்தியுள்ளனர். ேமற்கண்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

முதுகுளத்தூர்,

29.10.2024                                                 இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

–கையொப்பம்–

(க.பழனிச்சாமி)

குறிப்பு:

1. மேற்கண்ட மாதிரி மனுவின் படி உங்களுக்கு எதிராக என்ன குற்றம் நடந்ததோ அதை புகார் மனுவில் தெரிவிக்க வேண்டும்.

2. எதிரிகள், உங்களை கெட்ட வார்த்தைகளில் திட்டியிருந்தால், அதையும் அப்படியே புகாரில் தெரிவிக்க வேண்டும்.

3. எதிரிகள் தெரியும் எனில், அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள், அடியாளம் தெரிந்த பெயர் தெரியாத மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் எனில் அதற்கு தகுந்தார்போல் குறிப்பிட வேண்டும்.

4. புகார் மனுவில் ரூ.5/- மதிப்பிலானா நீதிமன்ற வில்லையை ஒட்டுவது இன்னும் சிறப்பாகும்.

Untitled design – 1

உங்கள் புகாரை சம்மந்தப்ப்ட்ட காவல் நிலையத்தில் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 (BNSS), பிரிவு 173-ன் படி முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்த FIR-ன் ஒரு நகலை BNSS, 2023 பிரிவு 173 (2)-ன் படி இலவசமாக கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு குற்றம் நடந்தால், அது கைது செய்வதற்குரிய குற்றம் நடைபெற்றதாக தெரியவந்தால், அதை தகவலாக காவல் நிலையத்தில் அளிக்கும்போது அதை பதிவு செய்வது அவர்களுடைய தலையாய கடமை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு புகார் கொடுக்கும்போதே Criminal law can be set in motion by any person செயல்பாட்டிற்கு வர வேண்டும்., இதனை Law Enforcement Agency ஆன காவல் துறையினர் செயல்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர்கள் அளிக்கும் புகாரை காவல்துறை பெரும்பாலான நேரங்களில் வழக்கு பதிவு செய்வதில்லை. அப்படி பதிவு செய்ய மறுத்தால் அது குற்றம் ஆகும். பதிவு செய்ய மறுக்கும் அதிகாரி மீது நீதிமன்றத்தில் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஒருவேளை ஏதாவதொரு காரணம் காட்டி, உங்கள் புகாரை சம்மந்தப்பட்ட காவல்நிலையம் பதிவு செய்ய மறுத்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

தேவரின மக்கள், நீங்கள் பிறரால் உண்மையாகவே பாதிக்கப்படும்போது, உங்கள் தரப்பில் தவறில்லாமல், நியாயம் இருக்கும்பட்சத்தில், சட்ட உதவி எதுவும் கிடைக்காதபட்சத்தில், தயங்காமல், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வேண்டிய சட்ட உதவிகள்/ஆலோசனைகள் இலவசமாகவே உங்களுக்கு தரப்படும். 

பசும்பொன் செ.முத்து
வழக்கறிஞர்/தலைவர்
நேதாஜி இளைஞர் சங்கம்
முக்குலத்தோர் சட்ட பாதுகாப்பு மையம்
அலைபேசி: 9952864439
netajiilaignarsangam@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *