கள்ளர் குல மலையமான் சேதிராயர்
கள்ளர் குல மலையமான் சேதிராயர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் சிறந்த அரசர்களுள் ஒருவரும் மாமன்னன் இராசராச சோழனின் தந்தையுமான சுந்தர சோழத்தேவர் ஆட்சி புரிந்து வந்தார்.
இவரது அரசிகளில் ஒருவரான வானவன் மாதேவி மலையமான் சேதிராயர் குலத்தில் உதித்தவர் என கல்வெட்டுகள் உரைக்கின்றன. திருக்கோயிலூரில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் கிடைத்த கல்வெட்டு இவரை மலையர் குலத்தில் உதித்தவர் என்றும், சுந்தர சோழன் மறைந்த பின்பு இவர் உடன்கட்டை ஏறியதாகவும் குறிப்பிடுகிறது.
” செந்திருமடந்தை ராஜராஜனென்னும் புலியை பயந்த பொன்மான் “
” தொங்கல் மணிமுடி வளவன் சுந்தரசோழன் மந்தரதாரன் இருப்பு முயங்குந் தேவி விருப்புடன் வந்துதித்தருளிய மலையர் குலத்தொரன்மையாக“
எனும் கல்வெட்டு வரிகள் ராஜராஜ சோழனின் தாயான வானவன் மாதேவி மலையர் எனும் மலையமான் குலத்தில் உதித்ததை குறிப்பிடுகின்றன.
“முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணுந் தலைமகற் பிரியாத் தையல்” எனும் கல்வெட்டு வரிகள் சுந்தரச் சோழனோடு, வானவன் மாதேவியும் உடன்கட்டை ஏறியதை குறிப்பிடுகிறது.
ராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை நாச்சியார் தனது தந்தை சுந்தர சோழன் மற்றும் தாய் வானவன் மாதேவி ஆகியோரின் படிமத்தை தஞ்சை பெரிய கோயிலில் எடுப்பித்து வழிபாடுகள் நடத்தி வந்ததை கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.
கல்வெட்டுகளில், கிளியூர் மலையமான்கள் குலோத்துங்க சோழ சேதிராயன் என்றும், கிளியூர் மலையமான் ராசராச சேதிராயன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர் (பிற்கால சோழர் சரித்திரம்- பகுதி 2- சதாசிவ பண்டாரத்தார்- பக் 91).
மலையமான்களும், வாணாதிராயர்களும் ஒரே வழியினராக இருந்ததை வாணகுலராயன் மலையமான், வாணகோவரைய மலையமான் என வரும் கல்வெட்டு ஆதாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன (Colas KAN sastri pg 403).
முதலாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு “கிளியூர் மலையமான்களில் அத்திமல்லனான எதிரிலி சோழ வாணகுலராயன்” என மலையமான்களை வாணாதிராயர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.(Ins 390 of 1902)
மகதராயன் கள்ளன்
கி.பி 1262 ஆம் ஆண்டைச் சேர்ந்த இரண்டாம் சுந்தரபாண்டியன் காலத்து காஞ்சிபுரம் கல்வெட்டில் “மகதராயன் கல்லன்” எனும் குறுநில தலைவர் அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மகத நாட்டின் தலைவனாக குறிப்பிடப்பட்டுள்ளார் (கல்வெட்டு 192 of 1901).
மலாடு எனும் சேதி நாடு, மகதை மண்டலத்தின் ஒரு பகுதி எனும் வகையில் “மகதை மண்டலம் மலாடாகிய ஜனநாத நாடு” என கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறத (சேலம்-நாமக்கல் வட்ட கல்வெட்டுகள் பக் 57).
திருக்கோவலூர் வட்டத்தில் மகதநாட்டை ஆட்சி செய்த வாணாதிராயர்களும் தங்களை மகத நாட்டின் தலைவர் என குறிப்பிட்டுள்ளனர். ஏகம்ப வாணன் எனும் வாணதிராய மன்னரை பற்றிய பெருந்தொகை பாடல் இவர்களை
“மகதேசன் ஆறைநகர் காவலன் வாண பூபதி” என குறிப்பிடுகிறது.
மலையமான்களும், வாணாதிராயர்களும் ஒரே கொடி வழியினர் என குறிக்கும் வகையில் கல்வெட்டுகளில் வாணகுலராயன் மலையமான், வாணகோவரைய மலையமான் என மலையமான்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் (Colas KAN sastri pg 403).
மகத தேசத்தை ஆண்ட வாணகோவரைய மலையமான்கள் மகதேசன் என்றும் மகதராயன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதே மகதராயர்கள் கல்வெட்டுகளில் ” மகதராயன் கல்லன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் கள்ளர் வம்சத்தினர் என்பதனை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. விசங்கி நாட்டு கள்ளர்கள் ஆட்சி செய்த புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் மகதராயன் எனும் அரையர் வாழ்ந்ததை புதுக்கோட்டை கல்வெட்டு எண் 636 குறிப்பிடுகிறது.
சேதி நாடு எனும் மகத நாட்டை ஆட்சி செய்த கள்ளர்கள் குல மலையமான்கள் சேதிராயர் எனும் பட்டத்தோடு புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
சேதிராயன் கள்ளன்
கிபி 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தர பாண்டியர் கால கல்வெட்டில் ” கள்ளன் நாண்மாலையான குலச்சேகர சேதிராயன்” எனும் மலையமான் வழியினர் கள்ளர் குலத்தவராக குறிப்பிடப்படுகிறார்.
ராஜராஜ சோழனின் தாயான வானவன் மாதேவியார், கள்ளர் குலத்தவர்களான மலையமான் சேதிராயர் குலத்தில் உதித்தவர் என கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன.
மலையமான் சேதுராயர்கள், கள்ளர் மரபினரின் ஒரு பிரிவனராக வாழ்ந்து வருவதாக 1907 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Trichinopoly gazetter பக் 108 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையிலும் கள்ளரின் ஒரு பிரிவினராக மலையமான் சேதிராயர்கள் வாழ்ந்து வருவதாக 1906 ல் எழுதப்பட்ட Tanjore gazetter பக் 76 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் கள்ளர்களின் ஒரு பிரிவினராக சேதிராயர்கள் வாழ்ந்து வருவதாக 1920ல் எழுதப்பட்ட Manual of pudukkottai state vol 1 பக் 110 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழர்களோடு மிக நெருங்கிய உறவில் இருந்த மலையமான் சேதிராயர்கள் தஞ்சையில் பெருமளவில் குடியேறியுள்ளனர். இன்றும் கள்ளர் குல சேதிராயர்கள் தஞ்சையில் இளங்காடு, திருச்சின்னம்பூண்டி, திருவேதிக்குடி, வேதபுரம், ஒரத்தநாடு வட்டத்தில் தென்னமநாடு, பனையக்கோட்டை தலையமங்கலம், சேதிராயன் குடிகாடு ஆகிய பகுதிகளிலும், மன்னார்குடி வட்டத்தில் சோழபாண்டியிலும் புதுக்கோட்டை வட்டத்தில் மழையூர் உள்ளிட்ட பல ஊர்களிலும் சேதிராயர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மகதையாண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் தஞ்சையில் துறையுண்டார்க்கோட்டை, பனையக்கோட்டை முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். கள்ளர் குல சேதிராயர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் சேதிராயர் எனும் பெயரை மையமாக வைத்து ஊர்களை உருவாக்கியுள்ளதை பின்வருமாறு அறியலாம்.
சேதுராப்பட்டி:- திருச்சி மாவட்டம், மணிகண்டம் வட்டத்தில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் மிகுந்து வாழும் சிற்றூர்.
சேதுராப்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் திருநல்லூர் ஊராட்சியில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சேதுராப்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் , சேதுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சேதுராவயல்: புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் வட்டத்தில், மேலப்புதுவயல் ஊராட்சியில் சேதுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சேதுராயன்ஏந்தல்:- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மாங்குடி ஊராட்சியில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சேதுராயன்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
சேதுராயன்நத்தம்:- திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான் வட்டம், மாணிக்கமங்கலம் ஊராட்சியில் கீழ சேதுராயநத்தம்/ மேல சேதுராயநத்தம் என இரு ஊர்கள் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர்.
கிளியூர் மலையமான்களின் வழிவந்த கள்ளர்கள் இன்றும் கிளியூரார், கிளியாண்டார் பட்டத்துடன் தஞ்சையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் ஊருக்கும் கிளியூர் என்றே பெயரிட்டு உள்ளனர். கிளியாண்டார்கள் திருச்சி துளசிமகா நாட்டிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தொகுப்பு: இளையர் பெருமகன்
ஆதாரங்கள்:
கல்வெட்டு ஆதாரம் வெளியீடு: 09 Oct 2024
Iam also kallar kula malaiyaman