விடுதலைத் தீயை பற்ற வைத்த பாண்டியர்கள்

அக்டோபர் 24, 1801 தொடங்கி ஜெனரல் ஆக்னியூ தலைமையில் மருது சகோதரர்கள், அவருடைய தளபதிகள், அவருடைய ஆண் வாரிசுகளான 10, 12 வயதே நிரம்பிய பாலகர்களைத் தூக்கிலிட்ட கொடுமை உலக வரலாற்றில் ஒப்பீடு சொல்லவியலாத நிகழ்வுகளாகும்.

மாமன்னர் மருது பாண்டியர்கள் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைத் தீயை பற்ற வைத்து தீவிரமான போராட்டத்தை தொடங்கி வைத்தவர்்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 வரை ஆயுதம் தாங்கி வீரதீரத்துடன்் போராடியவர்கள். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்து குழுக்களையும் ஒன்றிணைத்து ஒரு பெரும் போரை தொடங்க திட்டமிட்டவர்கள். ஆங்கிலேயர்களின் பிடியில் தமிழகம் இருந்த வேளையில், தென்னிந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து மாவீரர் பூலித்்தேவர், வீரமங்கை வேலு நாச்சியார், ரிபல் முத்துராமலிங்க சேதுபதி என பலர் போராடினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்் மருது சகோதரர்கள்். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் அந்த பெருமைமிகு இரட்டைச் சகோதரர்களைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். 

இளமைக் காலம்

மாமன்னர் மருது பாண்டியர்கள் இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் சேதுசீமை நாட்டின் தளபதியான உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகன்களாக 1748 மற்றும் 1753ல் பிறந்தனர். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்றும் அவரது தம்பி சிறியவராக இருந்ததால் சின்ன மருது பாண்டியர் என்றும் அழைக்கப்பட்டனர். 

சிறுவர்களான பெரியமருதுவும், சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும், விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர். சேதுபதி அரசர், மருது சகோதரர்களின் வீரத்தைப் பார்த்து, அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். பயிற்சிக்குப் பின் அவர்களை அரண்மனைக் காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.

சிவகங்கை சீமையில் மருது பாண்டியர்கள்

இராமநாதபுரம் சீமையின் அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதி, சிவகங்கைச் சீமையின் அரசரும் அவரது மருமகனுமான முத்து வடுகநாதத் தேவரின் கோரிக்கையை ஏற்று மருது சகோதர்களை 1761ம் ஆண்டு சிவகங்கை சீமைக்கு அனுப்பி வைத்தார். 

அவ்்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர், மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.

வீரமும் திறமையும் 

ஒருநாள் சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர், வேட்டையாட மருது சகோதரர்களையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது  ஒரு வேங்கை திடீரென அவர்கள் மீது பாய்ந்தபோது,  சின்ன மருது அந்த வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. பின்னர் மீண்டும் தாக்கிய அந்த வேங்கையை பெரிய மருது அதன் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்து அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. 

அமைச்சர்களாக மருது பாண்டியர்கள்

பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயதாகிவிட்ட காரணத்தால் அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும், மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். 

சிவகங்கை சீமையின் இழப்பு

ஆற்காடு நவாப் மற்்றும் பரங்கியர் சிவகங்கை சீமையின் அரசர் முத்துவடுகநாதரை சதி செய்து காளையார்கோவிலில் கொன்று, சிவகங்கை சீமையை பிடித்த பிறகு வேலுநாச்சியார், அவரது மகள் வெள்்ளச்சி நாச்சியார், அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை மற்றும் மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் விருப்பாட்சிக்கு தப்பிச் சென்றனர். அவர்களுக்கு 1772 முதல் 1779 வரை மறைவு வாழ்க்கை நடத்தும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு ஹைதர்அலியின் உதவியை பெற்று ஆற்்காடு நாவப்பிற்கும், கும்பினியர்களுக்கும் எதிராக இரகசியமாக படை திரட்டி வந்தனர். ஆங்கிலேயரின் ராணுவ பலத்துக்கும் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சிக்கு மருது பாண்டியர்கள் திட்டமிட்டார்கள். சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்துப் போர் பயிற்சியும் அளித்தனர். 

சிவகங்கைச் சீமை மீட்பு

எட்டு வருடங்களுக்கு பிறகு, அதாவது  1779-ல் வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் உதவியுடன்  ஆற்்காட்டு நவாப்் மற்றும் கும்்பினியர்களின் படைகளை எதிர்த்து தாக்குதல் தொடுத்தனர். போரில், பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். தீரத்துடன் போரிட்ட மறப்படை, எதிரிகளை வெற்றி கொண்டு 1780-ல் சிவகங்கைச் சீமையை மீட்டு, வீரமங்கை வேலுநாச்சியார் மீண்டும் அரியணையில் ஏறினார். 

மருது பாண்டியர் ஆட்சிப் பொறுப்பு

அரசி வேலுநாச்சியார் தனக்கு ஆண் வாரிசு இல்லாததால், சிவகங்கைச் சீமையின் ஆட்சி நிர்வாகத்தை தனக்கு உறுதுணையாக இருந்த மருது சகோதர்களிடம் 1780-ல் ஒப்படைத்தாா்். வேலுநாச்சியாரின் மரணத்திற்கு பிறகு மருதுபாண்டியர்கள் சிவகங்கையின் ஆட்சி பொறுப்பை ஏற்று சிறப்புடன்  ஆட்சி புரிந்தனர். அவர்களுடைய ஆட்சி மக்களுக்கானதாக இருந்தது. 

அறப்பணிகளும் மக்கள் தொண்டும்

மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. காளையார்கோவில் சிவன் கோவிலைச்் சீரமைத்து 152 1/2 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தைக் கட்டினார்கள். பின்னர் பல திருக்கோவில்களுக்கு தேர்கள், சீரமைப்பு மற்றும் திருப்பணிச் செலவுகள் ஆகியவற்றை செய்து தந்தனர். 

விவசாயிகளுக்கு பல அரசு உதவிகளை வழங்கிடும் நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்தனர்.கிராமங்கள் தோறும் குளம், கண்மாய்கள் வெட்டி நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். கொல்லங்குடியில் அவர்கள் அமைத்து கொடுத்த குடிநீர் ஊரணி ’மருது ஊரணி’ என இன்றும் அழைக்கப்படுகிறது. 

ஜம்புத்தீவு போர் பிரகடனம்

சிவகங்கை சீமையை கைப்பற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்த கும்பினியர்களுக்கு எதிராக சின்ன மருது பாண்டியர், 1801 ஜூன் 16 அன்று திருவரங்கம் கோவில் கதவிலும், திருச்சி மலைக் கோட்டையிலும்  போர்ப் பிரகடனத்தை அறிவித்து பகிரங்கமாக மக்கள் பார்வைக்கு ஒட்டினார். இந்த அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது.  இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான போர்ப் பிரகடனத்தை வெளியிட்டவர் மருதுபாண்டியர். 

ஆங்கிலேய படையெடுப்பு 

ஜம்புத்தீவு  போர் பிரகடனம் வெளியிட்டதற்காகவும், வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காகவும், 1801 மே 28 ல் ஆங்கிலேயர் சிவகங்கை சீமை மீது போர் தொடுத்தனர். இப்போர் சுமார் 150 நாட்கள் இடையறாமல் நடந்தது. எங்கும் இரத்த ஆறு ஓடியது. இறுதியில் ஆங்கிலேயரிடமிருந்து காளையார் கோவிலை காக்க மருது சகோதரர்கள் சரணடைந்தனர். 

மருதுபாண்டியர்கள் தூக்கு

கைது செய்யப்பட்ட மருது சகோதரர்களை 1801 அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் பெரிய மருதுவையும், அக்டோபர்் 27 அன்று சின்னமருதுவை புலிக்கூண்‌‌‌டில் அடைத்தும் தூக்கிலிட்‌‌‌டனர். பின்னர் மருதுபாண்டியர்களின் தலைகள்் துண்டிக்கப்பட்டு, தலைகள் காளையார் கோவில் எதிரேயும், உடல்கள் திருப்பத்தூரிலும் புதைக்கப்பட்டன. 

அதன் பிறகும், இரத்தவெறி அடங்காத ஆங்கிலேய அரசு ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோரை தூக்கிலிட்டது. 

வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் 15 வயது பாலகன் துரைச்சாமி சேர்வை, வேலுநாச்சியாரின் மருமகன் வேங்கண் பெரிய உடையார் தேவர் உட்பட 73 பேர்் கடல் கடந்த வேல்ஸ் தீவு, மலேசியாவின் பினாங்கு தீவுகளுக்்கு நாடு கடத்தப்பட்டனர். 

நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் ஈந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகம், வேறு எவரும் செய்திராத ஒன்று. மருது பாண்டியர்கள் இருவரும் இந்த பேரண்டம் உள்ளவரை போற்றப்படுவார்கள். அவர்கள் பற்ற விதைத்த விடுதலை நெருப்பு,  என்றும் அணையாத வள்ளலார் அடுப்பு போல் மக்கள் அனைவரின் மனதிலும் கணன்று கொண்டேதான் இருக்கும்.

வாழ்க மாமன்னர் மருதுபாண்டியர்கள்!

வளர்க அவர்களது புகழ்!

-ராஜா சேதுபதி – junchukc@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *