சாகா வரம் பெற்ற சண்முகையா பாண்டியன் – தொடர் 2
தான் நெல்லையில் பிறந்திருந்தாலும், தன் உயிர் ஆப்பநாடு என்றும், முக்குலம் தன் உடல் என்றும் உறுதியுடன் உரைத்திருந்தார் மாவீரன். சண்முகையாப் பாண்டியன் தென் தமிழகத்தில் தேவரினம் மத்தியில் பண்பாட்டு அடையாள அரசியலை முன்னெடுத்தார். தேவரினத்தவர்கள் மஞ்சள் துண்டு அணிய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோர் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஒற்றுமையை மிகத் தீவிரமாக தேவரின மக்களிடையே வலியுறுத்தி வந்தார். “நாய், பன்றிகளுக்குக்கூட இரத்தம் சிவப்பாகத்தான் உள்ளது. அதற்காக அவைகளுடன் உறவு வைத்துக்கொள்ளவா முடியும்” என்ற அவரது சினம் கொண்ட கேள்வியின் மூலம் இனக்கலப்பை அவர் எந்த அளவிற்கு எதிர்த்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அன்றைய காலகட்டத்திலேயே அவர் சென்றால், அவர் பின்னாடி 100 கார்களுக்கு மேல் அணிவகுத்துச் செல்லும். தேவருக்குப் பிறகு ஒரு தலைவர் பற்றிய பாடல்கள் வெளியானது என்றால், அது சண்முகையா பாண்டியனுக்கு மட்டுமே, அவரைப் பற்றிய பாடல்கள் சினிமா பாடல்களை விட கிராமங்கள் தோறும் புகழ் பெற்றது. ஆப்பநாட்டில் செய்யாமங்களம் போன்ற கிராமங்கள் அவரது போராட்டத்திற்கு உதவியாக பணம், பொன், பொருட்கள் என நேதாஜிக்கு, பர்மா தமிழர்கள் வழங்கியது போல, கொடுத்து உதவினர்.
சண்முகையா பாண்டியன் என்ற ஒருவருக்காக எதையும் செய்யும் மனநிலையில் மாறியிருந்தது தேவரினம். அப்படியிருந்தும் மக்களிடம், நானே ஒருவேளை தவறு செய்கிறேன் எனில், என் பின்னால் வராதீர்கள் என்று நல்ல தலைவர்களை மட்டும் பின்பற்றும்படி அறிவுறுத்தினார். இளைஞர்களை கல்வியில் கவனம் செலுத்தும்படி எப்போதும் கூறிக்கொண்டிருப்பார். அவரின் உரையைப் பார்த்து சமூக அரசியலில் குதித்தோர் பலர். இன்றைய தேவரினத் தலைவர்கள் பலருக்கும் அவர்தான் முன்னோடியாக இருந்தார்.
இராமநாதபுரம் மாநாடு-1998
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்குப் பிறகு தேவரினத்தைச் சேர்ந்த யாரும் மாநாடு என்று போட்டதில்லை. மாநாடு போடுவதற்கான முயற்சி எடுக்கும் சூழ்நிலை கூட அப்போது அமையவில்லை. தேவர் அவர்கள் மாநாடு நடத்தியது அனைத்து மக்களுக்குமானது, ஆனால் 90களின் காலகட்டத்தில். தமிழகத்தில் சூழ்நிலை முற்றிலும் மாறிப்போயிருந்தது. தேவரினத்திற்கென தனியாக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த இனம் இருந்தது. அக்காலகட்டத்தில் தேவரின மக்கள் தொடர்ந்து பல பிரச்சினைகளையும் சந்தித்து வந்து கொண்டிருந்தனர். அப்படிச் சூழ்நிலையில்தான், சிம்மக்குரலோன், மாவீரன் சண்முகையாப் பாண்டியன், தேவரினத்தை திரட்டி, ஆளுகின்ற அரசை அசைத்துப் பார்க்கும் விதமாக தேவர்குல கூட்டமைப்பு ஆரம்பித்த கையோடு இராமநாதபுரம், பட்டணம்காத்தான் பகுதியில் ஒரு மிகப்பெரிய மாநாட்டை முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்தார். 60களுக்குப் பிறகு நடக்க இருக்கும் தேவரினத்தின் முதல் மாநாடு.
சண்முகையா பாண்டியன் இராமநாதபுரத்தில் நடத்த இருக்கும் மாநாடு, அன்றைய அரசியலின் தலைப்புச் செய்தியாக மாறிப்போயிருந்தது. மாநாடு நடக்க இருக்கும் செய்தி காட்டுதீ போல் அனைத்து தேவரின கிராமங்களுக்கும் பரவியது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் மற்றும் ஊரிலிருந்து குறைந்தது 5 வண்டிகள் வரவேண்டும் என்ற தகவல் கொடுக்கப்பட்டது. முதல் நாளே இராமநாதபுரம், சண்முகையா பாண்டியன் நடத்த இருக்கும் மாநாட்டால் திமிலோகப்பட்டது. மாநாடு நடக்கும் பட்டினம்காத்தானில் எங்கு பார்த்தாலும் சிவப்பு மஞ்சள் நிறத்தை தவிர வேறு எந்த நிறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் காணவில்லை. இதை முன்கூட்டியே அறிந்திருந்த அன்றைய ஆளும் அரசு, சண்முகையா பாண்டியனின் வளர்ச்சியை தடுக்க திட்டம் போட்டது. இராமநாதபுரம் சீமையில் இருந்து இன்னொரு தேவர் உருவாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது.
சண்முகையா பாண்டியனின் எழுச்சி இராமநாதபுரம் மாவட்டத்தை மாத்திரம் அல்ல, அதன் வீரியம் தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கும் என்பதை தெரிந்தே வைத்திருந்தது திராவிட அரசு. இதை தடுத்தே ஆகவேண்டும், இல்லையேல் இது தமிழக அரசியலையே புரட்டிப் போட்டுவிடும் மற்றும் தனது ஆட்சிக்கே அது ஆபத்தாக முடிந்துவிடும் என்று நினைத்த அன்றைய அதிகார வர்க்கம், சண்முகையா பாண்டியனின் எதிரிகளோடு கைகோர்த்தது. அவர்களிடம் இந்த மாநாட்டை நடக்கவிடக் கூடாது. இதன் வெற்றியைத் தடுக்க வேண்டும், அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எங்கள் தரப்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. சிங்கத்தை வீழ்த்த நரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தன. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின்படி, எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாநாட்டை கலைக்க திட்டம் தீட்டி மாநாடு நடக்க இருக்கும் முந்தைய இரவே மாற்று சமுதாய கிராமங்களில் வந்து தங்கியிருந்தனர்,
சண்முகையா பாண்டியன் மாநாட்டில் பேச வேண்டிய விஷயங்களை தயாரித்துக் கொண்டிருக்க, ஒளிந்திருந்த ஓநாய்களோ, அதிகார வர்க்கத்தின் உதவியுடன் ஆயுதங்களை தயார் செய்து கொண்டிருந்தனர். அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு மாவீரன் சண்முகையா பாண்டியன், இராமநாதபுரம் அரண்மனையில் தங்கியிருந்தார்.
அக்டோபர் 4, 1998.
விடிந்தது மறுநாள்…விழாகோலம் பூண்டிருந்தது இராமநாதபுரம்….
தேவரின ஊர்களில் இருந்து மக்கள் அலை அலையாக திரண்டு வந்து கொண்டிருந்தனர். குடும்பத்தில் ஒருவர் வந்தால் போதும் என்று கூறியிருந்த நிலையிலும், ஒரே குடும்பத்தில் இருந்து தந்தை, அண்ணன், தம்பி என குடும்பம் குடும்பமாக உற்சாகமாக வந்து கொண்டிருந்தனர். எங்கும் தேவரின மக்கள் வெள்ளம். திரும்பும் இடமெல்லாம் தேவரினத் தலைகள், எவராலும் என்ணிச் சொல்லமுடியாது அளவுக்கு மிகப்பெரிய கூட்டம். மக்கள் லாரிகளிலும், வேன்களிலும் கார்களிலும் வந்து குவிந்தார்கள். எந்தவித பணமும், பொருளும் கொடுக்காமல், அதுபோன்றதொரு தன்னெழுச்சியாக கூடிய கூட்டத்தை அன்றைய காலகட்டத்தில் வேறு எங்கும் எவரும் பார்த்திருக்கவில்லை.
சென்னை, கோவை, மதுரை, தேனி, நெல்லை என அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வண்டிகள் இராமநாதபுரத்தின் இரு வழிச் சாலையில் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தன. மதுரை, உசிலம்பட்டி, தேனி பகுதிகளிலிருந்து வந்த தேவர்கள் பரமக்குடி வழியாக இராமநாதபுரத்திற்கு வரவேண்டும். இது போல் வெகுதூரத்தில் இருந்து வந்தவர்கள் பாதை தெரியாமல் மெல்ல மெல்ல அங்கொன்றும் இங்கொன்றுமாக விசாரித்து விசாரித்து வந்து கொண்டிருந்தார்கள். இதுதான் சமயம் என காத்திருந்த சாதிவெறியர்கள், சாலைகளை மறித்து தடுப்புகளை ஏற்படுத்தி, அதிகார வர்கத்தின் உதவியுடன் தேவரின மக்களின் மீது தாக்குதலை தொடுத்தனர். ஏற்கனவே திட்டமிட்டு வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் சேகரித்து வைத்திருந்த சமூக விரோதிகள், நிராயுதபாணிகளாக வந்த தேவமார்களின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பல அப்பாவி தேவரின மக்கள் கொல்லப்பட்டனர். தேவரினத்தவர் வந்த வண்டிகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டது. சாலை போடுவதற்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த கற்களை எடுத்து எறிந்ததில் பலருக்கு மண்டை உடைந்தது.
குறிப்பாக லாந்தை, சத்திரக்குடி, கன்னண்டை போன்ற ஊர்களில், கோழைகள் சாதிவெறியுடன் வழி தெரியாமல் நின்ற தேவரினத்தவர் மீது நடத்திய திடீர் தாக்குதலின் செய்தி மாவட்டம் முழுவதும் காட்டுதீ போல் பரவியது. வெகுண்டெழுந்த தேவரினத்தவர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது. எங்கும் மரண ஓலம். சாலையில் உயிரற்ற உடல்கள் சிதறிக்கிடந்தன. குற்றுயிரும் குலையுயிறுமாக கிடந்தவர்களைக்கூட சாதி வெறியர்கள் குத்திக் கொன்றனர். இதைக் கேள்விப்பட்ட சண்முகையா பாண்டியன் லாந்தை நோக்கி விரைந்தார். காவல்துறை அவரை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்துவிட்டது. வழியில் சாதி வெறியர்கள் பண்ணிய அட்டூழியங்களின் தகவல்கள் பரவியதையடுத்து இராமநாதபுரமே பற்றி எரிந்தது. சாதி வெறியர்களுக்கு உதவிய கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அன்றைய தினம் இராமநாதபுரமே போர்க்கோலம் பூண்டிருந்தது என்றால் அது மிகையல்ல. பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் தீக்கிரையாகின.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீஸார் இராமநாதபுரம் வடக்கு தெருவிலும், திருப்புல்லானியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் ஒரு பெண் உட்பட 5 பேர் பலியாயினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மேலும் காவலர்கள் குவிக்கப்பட்டனர். மாநாட்டுக்கு போயிருந்தவர்களை எண்ணி அவர்களது குடும்பத்தினர் பரிதவித்தனர். அப்போழுதெல்லாம் அலைபேசி இல்லாத காலகட்டம் அது. போனவர்களின் நிலை என்ன என்ற தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. மாநாட்டுக்கு வந்திருந்தவர்களை மாற்று வழியில் காவலர்கள் அனுப்பி வைத்தனர்.
இந்த மாநாடு நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு அதே இராமநாதபுரத்தில் இரண்டு தலித் மாநாடுகளை கிருஷ்ணசாமியும், ஜான்பாண்டியனும் அடுத்தடுத்து நடத்தியிருந்தனர். அந்த மாநாடுகளுக்கு தேவரினத்தைச் சேர்ந்தவர்கள் எந்த இடர்பாட்டையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் தேவரினத்தின் மாநாடு என்றால் வன்முறையை சாதி வெறியர்கள் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். அறத்துடன் வாழும் தேவர்களுக்கு என்றுமே சண்டைகளை ஆரம்பிக்கும் பழக்கம் இல்லை. பிற சாதி வெறியர்கள் பண்ணும் அட்டூழியங்களுக்கு மட்டுமே எப்போதும் எதிர்வினை ஆற்றி வந்திருக்கின்றனர் என்பதே வரலாறு. அதுதான் இராமநாதபுரத்திலும் நடந்தது என்று அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர் நமக்கு தெரிவித்தார்.
அரசு தரப்பில் மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிட்டது. மனித உரிமை கண்காணிப்பகம் என்ற அமைப்பு, இருதரப்பிலும் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டதாக கூறியது. ஆனால் உண்மையில் அன்று இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு தரப்பினர் தந்த தகவல்களை விட மிக அதிகம். இரண்டு நாள் வரை வாய்க்கால்களிலும், கண்மாய்களிலும் இருந்து பிணங்கள் மீட்கப்பட்டன என்று மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கூறினர். இக்கலவரத்தில் பலபேர் காயமுற்றனர். இராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சபை, இந்த கலவரத்தின் காரணமாக 3.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், மொத்தம் 300 கடைகள் நொறுக்கப்பட்டதாகவும், கூறியது. அதன்பிறகும் சில நாட்கள் சரஸ்வதிபுரம் மற்றும் வணன்கனேந்தல் உட்பட இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தன. போலீஸாருக்கு தீ வைப்பவர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது. கூடுதல் போலீஸ் படைகள் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இரு தரப்பிலும் பல பேர் மீது பல வழக்குகள் பதியப்பட்டன.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய வன்முறைகளைக் கருத்தில் கொண்டு மக்களைக் காக்கும் பொறுப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சித் தலைவர், செல்வி ஜெயலலிதா வலியுறுத்தினார்.
இவ்வளவு வன்முறைகளும் சண்முகையா பாண்டியன் என்ற ஒற்றை நபரை முடக்குவதற்காக அதிகார வர்க்கமும், சாதி வெறியர்களும் இணைந்து செய்த செயல்களே காரணம். நடந்த கலவரத்தைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, நாங்கள் ஏசுநாதர் பரம்பரையல்ல அமைதியாக போக, அடித்தார்கள், திருப்பி அடித்தோம் என்று கூறினார்.
மாநாட்டை திட்டமிட்டு சீர்குலைப்பதில் அதிகார வர்க்கம் வெற்றிபெற்றிருந்தாலும், பல உயிர்த் தியாகங்களுக்கு மத்தியில் மாவீரன் சண்முகையா பாண்டியன் தனது உரையை நிகழ்த்திவிட்டே இறங்கியிருந்தார். மாநாட்டில் சண்முகையா பாண்டியன் மிக முக்கிய கோரிக்கையாக தேவரின மக்கள் மீது பொய்வழக்குகள் பதிய காரணமாக இருக்கும் வன்கொடுமை சட்டம் வாபஸ் பெற வேண்டும் என்று கடுமையாக அந்தச் சட்டத்தை சாடி அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அன்று அவர் விதைத்த விதையின் காரணமாக, தேவரினம் ஒரு புதிய எழுச்சியை பெற்றிருந்தது.
அடுத்த இதழில் தொடரும்…