TNPSC-ல் சாதிவெறி அதிகாரிகளா?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண். 08/2024, நாள்: 20.06.2024 இன் வாயிலாக அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 2,327 இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ அறிவிப்பினை கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த செப்.14 அன்று நடந்த முதல்நிலைத் தேர்வை 5.81 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதியிருந்தனர்்.
இந்த குரூப் 2 முதல்நிலைத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றன. இரண்டாம் பகுதி மொழிப் பாடப்பகுதி. இதில் தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் இருந்து 100 கேள்விகள் இடம்பெற்றன.
முதல்நிலைத் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக தேர்வு மையத்தை தயார் செய்யும் பொருட்டு TNPSC, கடந்த 12.09.2024 அன்று குரூப்-2 தேர்வு பணிகளுக்கான சோதனை அதிகாரிகள் பற்றிய விபரங்களை வெளியிட்டது. அதில் 1010-உசிலம்பட்டியில்் உள்ள தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரியாக பசும்பொன் முத்துராமலிங்கம் கல்லூரி, உசிலம்பட்டி என்று வெளியிட்டிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனே அந்த அறிவிப்பை சரிசெய்து பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் கல்லூரி, உசிலம்பட்டி என மாற்றி அறிவித்தது. கல்லூரியின் பெயரை மாற்றி அறிவிப்பதிலும் மீண்டும் தவறுகள் இருந்தன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி என்பதற்குப் பதிலாக பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் கல்லூரி என்று இருந்தது கூட மிகப்பெரிய கொந்தளிப்பை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது.
இந்நிலையில் மேற்கொண்டு பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் TNPSC, மேலும் ஒரு கடும் கண்டனத்திற்குரிய செயலை செய்தது. கடந்த செப்.14 அன்று நடந்த முதல்நிலைத் தேர்வில் இரண்டாம் பகுதி மொழிப் பாடப் பகுதியில் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி கேட்்கப்பட்ட ஒரு கேள்விதான் இன்று விஸ்வரூப பிரச்சினையாக மாறியுள்ளது.
மேற்கண்ட தேர்வின் வினாத்தாளின் 128 வது கேள்வியாக கேட்கப்பட்ட ஆங்கில அரசால், ’வாய்ப்பூட்டுச் சட்டத்தின்’ மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்? என்ற வினாவிற்கு விடைகளாக 1. பெரியார் 2. ம.பொ.சிவஞானம் 3.முத்துராமலிங்கனார் 4. ப.ஜீவானந்தம் என்ற நான்கு விடைத் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தது.
இது பொது மக்களை குறிப்பாக தேவரின மக்களிடையே கடும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. TNPSC நிர்வாகம் குரூப்-2 முதன்மைத் தேர்வின் வினாத்தாளில்் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் முத்துராமலிங்கனார் என்று குறிப்பிட்டு கலங்கப்படுத்தியிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது சம்மந்தமாக பல தேவரின அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வாயிலாக TNPSC-க்கு எதிராக கண்டனக் குரல்கள் எழ ஆரம்பித்தன.
இது பற்றி தமிழ்நாடு நேதாஜி இளைஞர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் இ.ஆறுமுகசாமி அவர்களிடம் கேட்டபோது, TNPSC யின் உள்நோக்கமான இந்த சாதி வெறி வெளிப்பாடு கடும் கண்டனத்திற்குரியது. அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரரை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.
இதே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அன்று கேட்கப்பட்ட இதர கேள்விகளில், வினா எண்.87-ன்
விடைகளில் ஒன்றாக கஸ்தூரி அய்யங்கார் என்றும், வினா எண். 88 ல் குமாரசாமி நாயக்கர் என்றும் கேட்கப்பட்டுள்ளதே. இந்த முரண்பாட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எவ்வாறு விளக்கப்போகிறது? ஆக, தேவர் என்பது சாதிப்பெயராக இல்லாவிட்டாலும் கூட அந்த சொல்லாடல் மட்டும் அங்கிருக்கும் சில சாதிவெறி அதிகாரிகளுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது போல என்று நம்மிடம் ஆதங்கப்பட்டார்.
மேலும் அவர், தேசியத்தையும், தெய்வீகத்தையும் தன் இரு கண்களாக நினைத்து வாழ்ந்த, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், அவரின் இயற்பெயரே ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என்றும், சட்டமன்றம், பாராளுமன்றம் உட்பட பலப்பல சான்றிதழ்களிலும், அரசு ஆவணங்களிலும் அவ்வாறே இருக்கும் போது அவரது பெயரை இரட்டடிப்பு செய்து வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் முத்துராமலிங்கனார் என்று ஏன் TNPSC குறிப்பிட்டுள்ளது என்று புரியவில்லை. எந்த அரசாணையின் படி அவரது பெயரை இவ்வாறு மாற்றம் செய்தார்கள் என்று அறிய விரும்புகிறோம்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என்றே அவர் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் போது, அவரது பெயரை எதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான்தோன்றித்தனமாக மாற்றியமைக்க வேண்டும்? தேவர் என்பது சாதிப்பெயரா? இல்லை பசும்பொன் என்ற சொல் தமிழக அரசால் தடை ஏதும் செய்யப்பட்டுள்ளதா?
தேவர் என்பது சாதிப்பெயராகவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நினைத்துகொண்டாலும் அதை மாற்றும் அதிகாரம் அதற்கு கொடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை அவர் நம்மிடம் முன்வைத்தார்.
மேலும் அவர் தொடர்ந்து, இது எங்களைப் போன்ற லட்சக்கணக்கான தேவரின் பால் பற்று கொண்ட தேசப்பற்றாளர்களையும், தேசிய தாகம் கொண்ட இளைஞர்களையும் பெரும் கவலையிலும், விரக்தியிலும் ஆழ்த்தியுள்ளது. அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட லட்சோப லட்சம் மக்கள் மத்தியில் இச்செயல் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின்னனியில் வன்மத்துடன் கூடிய மிகப்பெரிய சதி இருப்பதாகவே சந்தேகிக்கிறோம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள ஏதோ ஒரு சிலர் சாதீய மனப்பான்மையுடன் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.
எனவே இது சம்மந்தமாக தமிழ்நாடு் நேதாஜி இளைஞர் சங்கத்தின் சார்பில், நான் TNPSC தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளேன்்். இந்த செயலுக்கு காரணமான அதிகாரியை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரும் காலங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளிலும், தேவர் சம்மந்தமாக கேட்கப்படும் கேள்விகள் அல்லது கொடுக்கப்படும் பதில்களில் ’பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என்றே அவரது முழுப்பெயரையும் பயன்படுத்த வேண்டும் எனவும், தேசியத் தலைவருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் ஏற்பட்டிருக்கும் இழுக்கை நீக்குவதற்கு இது சம்மந்தமாக பொது வெளியில் அவர்கள் சார்பாக விளக்கம் அளித்திட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருக்கிறேன். எங்களுக்கு உரிய பதில் தர TNPSC தவறும் பட்சத்தில், தேர்வாணையம் மீது சட்டப்படியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்றும் கூறினார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தேர்வு எழுதிய தேர்வர்கள் மத்தியிலும் பூதாகரமாக தற்போது வெடித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களில்் சிலர் நம்மை தொடர்பு கொண்டு, மேற்கண்ட கேள்வியின் சரியான விடை பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஆகும். ஆனால் விடைத் தேர்வுகளில் அவ்வாறான பெயர் எதுவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழங்கவில்லை. தமிழகத்தில் வாய்ப்பூட்டுச்சட்டம் வாங்கியவர்களில் பெரியார், ம.பொ.சிவஞானம், முத்துராமலிங்கனார் மற்றும் ப.ஜீவானந்தம் ஆகிய பெயர்களில் யாரும் இல்லை.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள 7ஆம் வகுப்பிற்கான தமிழ் புத்தகம் முதல் பருவம் தொகுதி-1, பக்கம் 58-ல் தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்தில், தமிழ்நாட்டில் வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கு ஆட்பட்ட தலைவர் முத்துராமலிங்கத்தேவர் என்றே கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட கேள்விக்கு தவறான விடைத்தேர்வை TNPSC கொடுத்துள்ளதால் அந்தக் கேள்விக்கு, மேற்கூறிய Group-II தேர்வை எழுதிய அனைவருக்கும் அந்தக் கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது சம்மந்தமாக சிலர் TNPSC க்கு மனுக்களையும் அனுப்பியுள்ளனர்.
நாம் பொதுமக்களிடம் பேசியதிலும், அதாரங்களை ஆய்வு செய்ததிலும் அறிய வந்தது என்னவெனில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அவரது பெயரை இரட்டடிப்பு செய்ததன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேண்டுமென்றே அவரை இழிவுபடுத்தியிருப்பதாகவே அறியமுடிகிறது. இதற்கு காரணமானவர்களை அதன் தலைவர்் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாவண்ணம் தடுப்பதுமே இதுபோன்ற சர்ச்சைகளுக்கு TNPSC முற்்றுப்புள்ளி வைக்கமுடியும். அதுவே ஒட்டுமொத்த தேசியவாதிகளின் தற்போதைய எதிர்பார்ப்பு.
-ரிப்போர்ட்டர்
naamthevar1@gmail.com